கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (ஜி.கே.என்.எம்), இதயத் தசை நோய் குறித்த ஒரு நாள் தொடர் மருத்துவக் கல்வி மற்றும் பயிலரங்கத்தினை நடத்தியது. மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான மருத்துவ வல்லுநர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு ரெசிடென்சி டவர்ஸில் நடைபெற்றது.
ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.ஜி.மனோகரன் இதனைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவர் டாக்டர்.சாம்பசிவம். மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர்.எஸ்.நடராஜன், மருத்துவ விவகாரங்கள் மற்றும் செயல்பாடுகளின் இயக்குனர் டாக்டர்.சந்தோஷ், ஐ.ஓ.பி மருத்துவ இயக்குனர் டாக்டர்.ராகவேந்திரா மற்றும் இதய செயலிழப்பு சிகிச்சை பிரிவு மற்றும் எக்கோ கார்டியோகிராபி தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர்.சண்முக சுந்தரம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 பிரதிநிதிகள் இந்தத் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதய நோய் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த கல்வித் தளமாக அமைந்தது. புகழ்பெற்ற வல்லுநர்களால் நடத்தப்பட்ட அறிவியல் அமர்வுகள், இதயத் தசை நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதிநவீன முன்னேற்றங்களை விளக்கின. நவீன இமேஜிங் தொழில்நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் மற்றும் முழுமையான இதய செயலிழப்பு மேலாண்மை யுக்திகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. கடந்த 50 ஆண்டுகளாக, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பட்ட இதய நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவ சிகிச்சை சார்ந்த சேவைகளை வழங்கும் ஒரு முன்னணி மருத்துவமனையாக திகழ்கிறது ஜி.கே.என்.எம். மருத்துவமனை. மருத்துவ நிபுணத்துவம், புதுமை மற்றும் கனிவான கவனிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இதயநோய் மருத்துவத்தில் தொடர்ந்து புதிய மைல்கற்களை எட்டி வருகிறது.
ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் இதயத் தசை நோய் குறித்த தொடர் மருத்துவக் கல்வி மற்றும் பயிலரங்கம்

(இடமிருந்து வலம்) ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் ஐ.ஓ.பி (IOP) மருத்துவ இயக்குனர் டாக்டர்.ராகவேந்திரா, இதய செயலிழப்பு சிகிச்சை பிரிவு மற்றும் எக்கோ கார்டியோகிராபி தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர்.ஆர்.சண்முக சுந்தரம், மருத்துவ விவகாரங்கள் மற்றும் செயல்பாடுகளின் இயக்குனர் டாக்டர்.சந்தோஷ், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.ஜி.மனோகரன், இதயவியல் துறைத் தலைவர் டாக்டர்.சாம்பசிவம் மற்றும் மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர்.எஸ்.நடராஜன் ஆகியோர் உள்ளனர்.


Leave a Reply