, ,

ஜிசிடி சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு

drones
Spread the love
கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் அப்பகுதி தற்காலிக ரெட் ஜோனாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. எனவே அரசு தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றியுள்ள சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், வடகோவை , ஆர் எஸ் புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, பி.என்.புதூர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் ஜூன் 4 ம் தேதி வரை இந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.