ஜிகேஎன்எம் மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான்

Spread the love

 

கோயம்புத்தூர் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், செப்டம்பர் 28-ஆம் தேதி “ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற விழிப்புணர்வு மாரத்தானை நடத்துகிறது.

செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும், செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இதயக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக அவர்களை குணப்படுத்த இயலும். இதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம். எனவேதான், பொதுமக்கள் அனைவரும் குழந்தைகள் புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக, செப்டம்பர் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 மணிக்கு கோவை, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் இந்த மாரத்தான், நடைபெறவுள்ளது.

மூன்று வெவ்வேறு பிரிவுகளில் இந்த மாரத்தான் நடைபெறவுள்ளது: எல்லா வயதினருக்கும், 1 & 3 கி.மீ. இதில் குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஒன்றாக ஓடலாம். 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் 5 கிமீ ஓட்டம் உள்ளது. மற்றும் 10 கி.மீ. இதில் 18 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளலாம். மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஒரு பிரிவாக இதில் கலந்து கொள்ளலாம். 5 மற்றும் 10 கிமீ பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, ரொக்க பரிசு தொகை ரூ.75,000 அறிவிக்கப்பட்டுள்ளது. மாரத்தான் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாரத்தானை எல்.எம்.டபிள்யு,லக்ஷ்மி மில்ஸ் கம்பெனி மற்றும் லக்ஷ்மி கார்ட் க்ளோதிங் ஆகிய நிறுவனங்களும் இணைத்து நடந்துகின்றது.

கோவையில்  உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை வளாகத்தில் மாரத்தான் டி-சர்ட் மற்றும் பதக்கத்தின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ரகுபதி வேலுசுவாமி கூறியதாவது: ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் 2024 இன் இரண்டாவது பதிப்பில், 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 55 குழந்தைகள், இந்த மரத்தானில் கிடைத்த நிதி மூலம் பயனடைந்தனர்.

மேலும், டாக்டர். ரகுபதி வேலுசுவாமி கூறியதாவுது, கடந்த இரண்டு பதிப்புகளில் போலவே இம்முறையும், ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகள், இந்த மரத்தானில் கலந்து கொள்ள உள்ளனர். கே என் சி அறக்கட்டளையின் ஒரு பிரிவான ஜி.கே.என்.எம். மருத்துவமனை, கோயம்புத்தூர் நகரத்தில் குழந்தைகளுக்கான இருதய பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் சிகிச்சையில் முன்னோடியாக உள்ளது. இந்த இரண்டு மருத்துவ பிரிவுகளுமே, நவீன தொழிநுட்பங்களுடனும், உலகத்தரமான மருத்துவக் கருவிகளுடனும் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.