கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தலைமை உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் , குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் துணைத்தலைவர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply