நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படம் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் அஜித் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஜன நாயகன் விஜயின் கடைசி படம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் விஜய்க்கு ஒரு ஃபேர்வெல் பார்ட்டி போல நடத்த திட்டமிட்டுள்ளது.
வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மட்டும் இல்லாமல் பல திரைப்பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். நடிகர் அஜித் தற்போது மலேசியாவில் கார் ரேஸில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அஜித்தை இந்த விழாவில் கலந்து கொள்ள வைக்க வேண்டுமென விஜய் விரும்புகிறார். அதே நேரத்தில் அஜித் தனது படத்தின் புரோமோசனுக்கே வர மாட்டார், இதில் விஜயின் பட புரோமோசனுக்கு வருவாரா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. ஆனாலும் இது புரோமோசன் என்பதை கடந்து விஜய்க்காக ஃபேர்வெல் பார்ட்டியாக நடக்கவுள்ளதால், அஜித் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.



Leave a Reply