டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் இல்லாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி நகராட்சி சோமனூர் வாரச்சந்தைக்கு தெற்கு பகுதியில் மில் ரோட்டில், மீனாம்பிகா தியேட்டர் அருகில் தற்போது புதிய மதுபான கடை திறக்கப்பட்டுள்ளதாகவும் எற்கனவே கருமத்தம்பட்டி சோமனூர் 27-வது வார்டு பகுதியில் இரண்டு மதுபான கடைகள் செயல்படுகிறது என்று ஊர் பொது மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
சோமனூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபான கடை எண் 1689 கடைக்கு அருகில் வாரம் இரண்டு முறை இயங்கும் வாரச் சந்தை,ஆரம்ப சுகாதார நிலையம்,கிறிஸ்துவ தேவாலயத்திற்கும் சோமனூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வந்து செல்கின்ற பகுதியில் மதுபான திறக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் மிகவும் பாதிக்கக்கூடிய சூழ்நிலையில் உருவாகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக டாஸ்மார்க் கடையில் அகற்ற வேண்டும் அதேபோல சூலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகளை சீரமைத்து தர வேண்டும்,குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் இல்லாவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.
Leave a Reply