,

சொக்கம்புதூரில் சுத்திகரிப்பு மையத்திற்கு எதிர்ப்பு

Spread the love

கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள மயானம் அருகே நகராட்சி அனுமதியுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக இந்த பகுதியில் இந்துக்களின் சுடுகாடு செயல்பட்டு வருகின்றது. மயானத்தின் சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும், அந்த இடத்தின் நேரெதிரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதால் சுகாதார சிக்கல்கள் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது என்பதையும், குழந்தைகள், முதியோர் உட்பட அனைத்து வசிப்பாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் புகார் கூறுகின்றனர்.

இதே போன்று, உக்கடம் புல்லுக்காடு மற்றும் வெள்ளலூர் போன்ற பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களால் மக்கள் பெரும் சுகாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருவதையும் அவர்கள் எடுத்துக்காட்டினார்கள்.

“சுடுகாடு என்பது இறந்தவர்களை புதைக்கும் அல்லது எரிக்கும் புனித இட