சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக சீலநாயக்கன்பட்டி தனியார் மைதானம், போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றில் கூட்டம் நடத்த அனுமதி கோரி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவை பரிசீலித்த காவல்துறை, டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபம், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் என்பதால், டிசம்பர் 4ஆம் தேதியைத் தவிர்ந்த மற்ற நாள்களில் அனுமதி வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. கூடுதலாக, மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிடப்படாததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய சிரமம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரம்பலூர் பயணம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, “பெரம்பலூர் மக்களிடம் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்; விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன்” என்று விஜய் தெரிவித்தார்.