சென்னை மெட்ரோ – வாட்ஸ்அப் டிக்கெட் சேவையில் கோளாறு

Spread the love

சென்னை மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தற்காலிக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் சேவையில் ஏற்பட்ட கோளாறினால், வாட்ஸ்அப் சாட்பாட் சேவை தற்காலிகமாக இயங்கவில்லை. எனவே பயணிகள், சென்னை மெட்ரோ மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை அட்டை மற்றும் மெட்ரோ பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் சிரமம் அடைவதை தவிர்க்க, மெட்ரோ நிலையங்களில் உள்ள கவுண்டர்களிலும் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“உண்டான சிரமத்திற்கு மன்னிக்கவும். விரைவில் சேவை மீண்டும் வழக்கம்போல இயங்கும்” என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.