சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றி லேயே தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்ததில்லை.
அப்படி ஒரு மோசமான நிலைமையை 2025 ஐபிஎல் தொடரில் சந்தித்து இருக்கிறது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு ஆடிய போட்டிகளில் தோற்றுள்ளது.
தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு புள்ளிகளுடன் -1.554 என்ற நெட் ரன் ரேட்டுடன் 9வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் சிஎஸ்கே அணி இன்னும் ஏழு வெற்றிகளை பெற வேண்டும்.
பொதுவாக ஐபிஎல் லீக் சுற்றில் எட்டு வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் ஒரு அணி இருந்தால் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடலாம்.
சென்னை அணிக்கு இன்னும் எட்டு போட்டிகள் மீதம் உள்ளன.
அதில் ஏழு வெற்றிகளை பெற்றால் உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஒரு வேளை எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகள் மற்றும் புள்ளிகளை வைத்து சிஎஸ்கே அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், 8 போட்டிகளில் 7 அல்லது 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறுவது கடினமான காரியமே.
சென்னை அணிக்கு என்ன நடந்தால் சான்ஸ் உண்டு?

Leave a Reply