சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு

Spread the love

சென்னையில் பா.ஜனதா தேர்தல் மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளனர். பா.ஜனதா சார்பில் தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா மற்றும் இணை பொறுப்பாளர் மத்திய இணை மந்திரி முரளிதர் மொஹோல் ஆகியோர் முதன்முறையாக சென்னைக்கு வந்தனர்.

தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் அவர்கள் மாநில நிர்வாகிகளுடன் முதற்கட்ட ஆலோசனையை நடத்தினர். இதில் பா.ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் போது, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு மற்றும் அ.தி.மு.க–பா.ஜ.க கூட்டணி பிரச்சார திட்டங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. மேலும், நயினார் நாகேந்திரன், சுற்றுப்பயணம் தொடர்பான அழைப்பையும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியுள்ளார்.