தமிழக அரசில் முக்கியமான அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கே.பொன்முடி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சரவை துறை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் கலால் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தற்போது வனத்துறை மற்றும் காதி துறைகளையும் பொறுப்பேற்கிறார்.
மேலும், பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. டி. மனோ தங்கராஜ் தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார். அவர் நாளை (ஏப்ரல் 28) மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்கவுள்ளார்.
Leave a Reply