சூலூர் காவல் நிலையத்தில் 500 சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் அளவிலான வீடியோ வால் மற்றும் காவல் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 2300 சதுர அடியில் நான்கு அறைகளுடன் கூடிய கட்டிடத்தையும் மேற்கு மண்டல ஐஜி கே. பவானீஸ்வரி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கோவை சரசு துணைத்தலைவர் ஏ. சரவண சுந்தர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். வி. பத்ரிநாராயணன். ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார்.
இந்த் புதிய கட்டடத்தில் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்காக மூன்று அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 × 18 அடி அளவுகொண்ட கட்டுப்பாட்டு அறையில் மேற்படி 500 சிசிடிவி கேமராக்களையும் ஸ்கைலிங் ஃபைபர்நெட் என்ற நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து கேமராக்களும் கண்காணிக்க இந்த கட்டுப்பாட்டு அறையில் நவீன வீடியோ வால் பொருத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு பிரதான சாவைகளாக கோவை – அவினாசி நெடுஞ்சாலை, சேலம் கொச்சின் நெடுஞ்சாலை, கோவை – திருச்சி நெடுஞ்சாலை, செட்டிப்பாளையம் – பல்லடம் நெடுஞ்சாலை ஆகியவை உள்ளன. இவற்றை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகள் பலவும் உள்ளது சாலைகளில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை அடையாளம் காணவும் குற்றச்சம்பவங்களை தடுக்கவும் மேற்படி சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக இருக்கும்.
Leave a Reply