கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 31வது வார்டில், கட்டப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்த போது அடித்தளம் இடுவதற்காக தோண்டப்பட்ட குழிகள் அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து பணிகளை மேற்கொள்ளுமாறு சூயஸ் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மாநகராட்சி ஆணையாளர் அங்கு கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பொழுது மேற்கூறிய எந்த அமைப்பும் சலுகைதாரரால் மேற்கொள்ளப்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.எனவே சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் நோட்டீஸ் வழங்கி ரூ 10,00,000 (ரூபாய் பத்து லட்சம் ) அபராதம் விதித்து உத்தரவிட்டார்
Leave a Reply