சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அறிவிப்பு!

Spread the love

ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் பயண வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் மொத்தமாக 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில்,

  • சென்னை கிளாம்பாக்கிலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு 1,320 பேருந்துகள் இயக்கப்படும்.

  • கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு 190 பேருந்துகள்,

  • மாதவரம் டிப்போவிலிருந்து 24 பேருந்துகள் இயக்க திட்டம்.

  • பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிற நகரங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  • விடுமுறை முடிந்த பிறகு, ஆகஸ்ட் 17 அன்று ஊர் திரும்ப வசதிக்காக 715 பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு மொத்தமாக 2,449 பேருந்துகள் பயணிகளுக்காக இயக்கம் பெற உள்ளன. மேலும், அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். தற்போது வரை 67,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.