, , ,

சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் கோவை மாநகராட்சி மற்றும் ரயில் நிலையம்…..

august 15
Spread the love

நாட்டின் 78-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. பொதுமக்கள் தேசியக் கொடியை தங்கள் வீடுகளில் பறக்கவிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இது போல் அரசு அலுவலகங்கள் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.கோவை மாநகராட்சியின் பிரதான கட்டிடமான மற்றும் மாமன்ற கூட்டம் நடைபெறும் விக்டோரியா ஹாலிலும்,கோவை ரயில் நிலையத்தில் உள்ள கட்டிடங்களில் மூவர்ண கொடிகள் கொண்ட வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள் காண்போரை கவர செய்துள்ளது.