,

சீட் கொடுக்காவிட்டாலும் திமுகவுடன் தான் கூட்டணி – துரைவைகோ திட்டவட்டம்

வைகோ
Spread the love

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ பங்கேற்றார்.நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரைவைகோ, தேர்தல் பத்திரம் மூலமாக தேர்தல் நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜக விற்கு கொடுத்துள்ளதாகவும் தேர்தல் பத்திரம் கொடுப்பது செல்லாது எனவும் 2018 முதல் இன்று வரை பெறபட்ட நிதியை திருப்பி செலுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜக அரசுக்கு கொடுத்திருக்க கூடிய சம்மட்டி அடியாக நான் இதைப் பார்க்கிறேன் என தெரிவித்தார்.12 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன இதில் 6,500 கோடி ரூபாய் பா.ஜ.க மட்டும் பெற்றுள்ளது எனவும்,
90 விழுக்காடு நிதியை தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக பெற்று இருக்கின்றது எனவும், மீதமுள்ள தொகையினை 30 க்கும் மேற்பட்ட கட்சிகள் வங்கி இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் தெரிவித்த அவர் மத்தியில், மாநிலத்தில் ஆளுகின்ற கட்சிகள் மட்டும் ஒரு தரப்பாக தேர்தல் பத்திரம் போய்விடக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் இருக்கின்றோம் என கூறிய துரைவைகோ, 2024 ல் மீண்டும் மோடி வந்து விடக்கூடாது , மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்றார். அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை எனவும்,அதிமுக பாஜகவை எதிர்ப்பதை வரவேற்கின்றோம் எனவும்,பாஜக எதிர்ப்பை அடுத்து வரக்கூடிய காலத்தில் மக்களும் நம்ப வேண்டும், நாங்களும் நம்ப வேண்டும் என தெரிவித்தார்.
மதவாதசக்திகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக மதிமுக கூட்டணி உருவாக்கியது கூறிய அவர் சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது எனவும் யாரெல்லாம் பாஜகவை எதிர்க்கின்றார்களோ அவர்களை அமலாக்கத்துறை , சிபிஐ போன்ற ஒன்றிய அரசின் ஸ்தாபனங்கள் மூலம் நெருக்கடி கொடுக்கிறது எனவும் தெரிவித்தார்.

2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என தெரிவித்த அவர்,
கடந்த முறை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி உறுப்பினர்கள் பெற்றிருந்தோம், இந்த முறை கூடுதலாக ஒரு மக்களவை தொகுதி வேண்டும் என திமுக தலைமையிடம் கேட்டு இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம், கேட்ட சீட் கொடுக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம் என தெரிவித்தார்.