சி.எம்.எஸ். அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் 19-வது பட்டமளிப்பு விழா

Spread the love

கோவை சி. எம். எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 19-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவின் முத்தாய்ப் பாக 3 சிறப்பு அங்கீகாரம் பெற்ற மாணவர்களுக்கும் 34 கல்விசார் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்ற மாணவர்களுக்கும் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மொத்தம் 794 மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவின் தொடக்கத்தில் முதல்வர் டாக்டர் எஸ். விமலானந்த் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக, கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்க்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் வி. பாரதி ஹரிசங்கர் கலந்து கொண்டார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைத் தலைவர் முனைவர் ஏ.விஜய் ஆனந்த் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார். சி. எம். எஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் கே. கிரீசன், துணைத்தலைவர், பி. வி. சஜீஷ் குமார், செயலாளர் வி. சந்திரகுமார், சி. எம். எஸ்.நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ். சந்தியா மேனன், சி. எம். எஸ். சி. எஸ். சி.-இன் முதல்வர்கள் டாக்டர் எஸ். விமலானந்த், சி. எம். எஸ். ஏ. எம். டி. -இன் முதல்வர் டாக்டர் எம். அன்னபூரணி மற்றும் சி. எம். எஸ். ஐ. எம். எஸ்.-இன் முதல்வர் டாக்டர் எஸ்.ஏ. முகமது அலி,சி. ஆகியோர் கலந்து கொண்டனர்.