அம்மாவும், அண்ணணும் சிறையில் இருந்து தப்பிக்க பாக்குறாங்க; பசிக் கொடுமையால் பெற்றவளையை காட்டி கொடுத்த சிறுவன்!
தற்போது, உலகின் மிக மோசமான சர்வாதிகாரியாக பார்க்கப்படுபவர், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். வல்லரசுகள் போல ராணுவ வல்லமை கொண்டிருந்தாலும் வடகொரியா வறுமையில் உழழும் நாடு. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை எளிதால் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. நீங்கள் என்ன படிக்க வேண்டும், நீங்கள் என்ன வேலை பார்க்க வேண்டும். செல்போனில் என்ன பார்க்க வேண்டும் , கல்யாணத்துக்கு எத்தனை பேரை கூப்பிட வேண்டுமென்பதை கூட அரசுதான் முடிவு செய்யும். உங்கள் தாத்தா அரசுக்கு எதிராக குற்றம் இழைத்தால் பேரன் வரை சிறைக்கு செல்ல நேரிடும். அதாவது , ரத்தத்திலேயே குற்றத்தன்மை இருப்பதாக கருதப்படும். அவ்வளவு ஏன்… சொந்த குடும்பத்தில் கூட நீங்கள் யாரையும் நம்பி எதையும் பேசி விட முடியாது.
இந்த நாட்டில் 1981 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்று மிகவும் கொடுமையானது. கர்ப்பிணி பெண் ஒருவர் வடகொரியாவில் அரசியல் துரோகம் செய்வதர்களுக்கான கேம்ப் 14 என்ற சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த பெண்ணுக்கு சிறையிலேயே குழந்தையும் பிறந்தது. தனது குழந்தைக்கு அந்த பெண் ஷின் டாங் கியூக் என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தார். இந்த குழந்தையின் அண்ணணும் அதே சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். குழந்தையும் சிறையிலேயே வளர்ந்தது. வடகொரிய அரசின் சர்வாதிகார கொள்கைப்படி, குடும்பத்தில் ஒருவர் அரசை எதிர்த்து குற்றமிழைத்தால், குடும்பத்திலுள்ள அனைவரும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். குழந்தையின் மாமா செய்த குற்றம் காரணமாக அவரின் கர்ப்பிணி சகோதரியும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். முதலில் தாய்ப்பால் குடித்து குழந்தை வளர்ந்தது. சிறுவனாக வளர்ந்ததும் தினமும் கொஞ்சம் மாக்கா சோளம் மட்டுமே அவனுக்கு சிறையில் உணவாக வழங்கப்பட்டது.
இதன் காரணமாக சிறுவனோ பசி ,பட்டினியால் தினமும் துடித்து , துடித்து போய் கிடந்தான். சில சமயங்களில் புல்லை தின்று பசியை ஆற்றிக் கொண்டான். இந்த சிறையில் 20 ஆயிரம் கைதிகள் இருந்தனர். இங்கிருந்து தப்பிக்க முயன்றால், ஒரே முடிவுதான் , சுட்டுக் கொன்று விடுவார்கள். யாராவது தப்பிக்க திட்டம் போட்டு, அந்த விஷயம் நமக்கு தெரிந்தால் , உடனே சிறை அதிகாரிகளுக்கு தகவல் கூற வேண்டும் . இல்லையென்றால் , அவர்களும் தூக்கிலிடப்படுவார்கள். சிறையில் வளர்ந்த ஷின் டாங்கிற்கு அப்போது, 13 வயதாகியிருந்தது. ஒரு முறை தனது தாயும், சகோதரரும் சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் போடுவதை ஷின் டாங் அறிந்தான். மிகுந்த பசிக் கொடுமையில் இருந்த அந்த சிறுவன், தனது தாயும் சகோதரரும் தப்பிக்க திட்டம் போடுவதாக சிறை பாதுகாவலர்களிடம் சென்று கூறினான். அப்படி, சொன்னால் தனக்கு கூடுதல் உணவு கிடைக்கும் என்பது அவனது எண்ணமாக இருந்தது. ஆனால், நடந்ததோ வேறு.
அடுத்து என்ன நடந்தது …. ஷிம் டாங்குக்கு உணவு கிடைத்ததா? அடுத்த வாரம் பார்க்கலாம்

Leave a Reply