, ,

சின்னத்தம்பி ரெட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பாக, இலவச கண் பரிசோதனை முகாம்……

medical camp
Spread the love

மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் வாடிப்பட்டி சின்னத்தம்பி ரெட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பாக, இலவச கண் பரிசோதனை முகாம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த முகாமிற்கு, அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சீனிவாசன், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் கராத்தே சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொருளாளர் சக்திவேல் வரவேற்றார். இந்த முகாமில், கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் ஹர்ஷிதா தலைமையில் செவிலியர்கள் காயத்ரி, மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ஜெயகர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் 210 பேருக்கு கண் பரிசோதனை செய்து , 107 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப் பட்டனர். இதில், ராஜா, அர்ஜுனன், எலக்ட்ரீசியன் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நற்பணி மன்ற செயலாளர் ஆட்டோ கண்ணன் நன்றி கூறினார்.