, ,

சினிமாவுக்கு முழுக்கு போடும் திரிஷா? அரசியல் என்ட்ரியா?

trisha
Spread the love

 

தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா என அனைவருடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. 40 வயதை நெருங்கும் திரிஷா, இன்றளவும் தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.விரைவில் அஜித்துடன் இணைந்து திரிஷா நடித்த விடா முயற்சி, குட் பேட் அக்லி படமும் வெளியாகவுள்ளது.

வயது அதிகமாகி விட்டதால், திருமண செய்தியை நடிகை திரிஷா வெளியிடுவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, அவரின் புதிய முடிவு ஒன்று பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. அது அவரது அரசியல் எண்ட்ரி தான். நடிகை திரிஷா அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. அதாவது, தனது நண்பர் விஜய் பாணியில் அரசியலில் நுழைய போகிறார். பெரும்பாலும் தமிழக வெற்றிக்கழகத்தில்தான் தன்னை இணைத்துக் கொள்வார் என்று கூறுகிறார்கள். திரிஷாவின் அரசியல் பிரவேசத்துக்கு அவரின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் உள்ளது.

இது குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றில் கூறியதாவது, முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் நடித்து மிகவும் போரடித்து விட்டது. மனச்சோர்வும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் , இனி சினிமாவில் நடிக்க வேண்டாம், நடிப்பை விட்டு விலகி விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து தயாரிடத்தில் திரிஷா சொன்ன போது தாயார் சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதமே நடந்துள்ளது. திரிஷா திருமணம் குறித்த எந்த தகவலும் இல்லை. அதனால் சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கைக்கும் செல்ல வாய்ப்பில்லை. எப்படியிருந்தாம், திரிஷா சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக உறுதியாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.