சிட்கோ பணியாளர்களுக்கான தங்கும் விடுதி கட்டிட பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்!

Spread the love

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண் -98 க்கு உட்பட்ட குறிச்சி சிட்கோ பகுதியில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு சிறு தொழில்கள் வளர்ச்சிக் கழகம் லிமிடெட்  (TANSIDCO)  பணியாளர்களுக்கான தங்கும் விடுதி கட்டடத்தினை கட்டுமானப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார்.

சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் 1.49 ஏக்கர் பரப்பளவில் ரூ. 23.05 கோடி மதிப்பீட்டில் 4 தளங்கள், 528 அறைகள் கொண்ட சிட்கோ பணியாளர்கள் தங்கும் விடுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து, அங்கு நடைபெறும் பணிகள் குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.