உலகக் கோப்பை கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. இந்த முறை உலகக் கோப்பை தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன. இதனால், பல நாடுகள் உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வரிசையில், கூராசாவ் என்ற சிறிய நாடு உலகக் கோப்பைக்கு முன்னேறியுள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 1,56, 115 பேர்தான். ‘பி ‘ பிரிவில் தனது கடைசி ஆட்டத்தில் ஜமைக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 12 புள்ளிகளுடன் கூராசாவ் முதலிடத்தை பிடித்தது. இதன்மூலம், முதல்முறையான இந்த நாடு உலகக் கோப்பைக்கு முன்னேறியுள்ளது.
இந்த அணிக்கு நெதர்லாந்தைச் சேர்ந்த 78 வயதான டிக் அட்வாகட் பயிற்சியாளராக உள்ளார். நெதர்லாந்து, ரஷ்யா, தென்கொரியா, பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் இவர் பயிற்சியாளராக இருந்துள்ளார். முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை தொடருக்கு 3.50 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்து அணி முன்னேறியிருந்தது. அப்போது, உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்ற குட்டி நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து பெற்றிருந்தது. தற்போது, அந்த பெருமையை கூராசாவ் நாடு பெற்றுள்ளது.
அதேபோல ,ஹைதி நாடும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த 1974ம் ஆண்டு ஹைதி உலகக் கோப்பை தொடருக்கு முன்னேறியிருந்தது



Leave a Reply