சிங்காநல்லூர் தொகுதியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ கே.ஆர். ஜெயராம்

Spread the love

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பி.ஆர்.புரம், சௌரிபாளையம், மசக்காளிபாளையம், TNHB காலனி, வரதராஜபுரம், புலியகுளம் பகுதிகளில் நடைபெற்ற பூஜைகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இந்த நிகழ்வுகளில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுடன் விழாவில் பங்கேற்றார்.