,

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய நபர் கைது

gold
Spread the love
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில், தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த, 28ம் தேதி சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் வந்த ஒரு பயணியின் நடவடிக்கையில், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து சோதனை செய்ததில், அவர் தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.26 கோடி மதிப்பிலான இரண்டு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.