சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக கிளை உறுப்பினரும், தீவிர விசுவாசியுமான க. தங்கராஜ், அண்மையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி எழுச்சிப் பயண பிரச்சாரத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போது நிகழ்ந்த விபத்தில் அவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தி தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், சாலையில் பயணிக்கும் கட்சியினர்கள் எச்சரிக்கையுடன் மற்றும் பாதுகாப்புடன் இயங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், மறைந்த தங்கராஜின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.10,00,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.