சாதி பெயர் சொல்லி திட்டல், தாக்குதல் – தொழில் பயிற்சி விடுதி வார்டன் மீது மாணவர்கள் புகார்!

Spread the love

கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள அரசு தொழில் துறை பயிற்சி நிறுவன விடுதியில் தங்கி வரும் மாணவர்கள், வார்டன் பிரபு என்பவர் மீது சாதி பெயர் சொல்லி திட்டல், தாக்குதல் உள்ளிட்ட கொடுமைகள் செய்துவருவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்கள் தங்கியுள்ள சமூக நீதி விடுதியில் நடைபெறும் தர்க்கரிய வார்த்தைகள், உடல் தாக்குதல், மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுகள் குறித்து மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாணவர்கள் தெரிவித்ததாவது:
வார்டன் பிரபு அடிக்கடி மாணவர்களை சாதி பெயரை வைத்து திட்டும், சட்டை அணியாததை காரணமாக்கி மாணவர்களை தூக்கி அடிக்கும் நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் நடத்தை தோல்விப்படும் மாணவர்கள் மனநிலை பாதிக்கும்வரை போய்விட்டதாகவும் கூறினர்.

முன்பும் இதே வார்டன் குறித்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றாலும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல், விடுதியில் உள்ள சிசிடிவி கேமரா உடைந்ததால், காவல் துறையினர் விசாரணைக்காக வந்தபோதும், மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தாலும், வார்டன் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

மாணவர்கள் தற்போது கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்து, வார்டன் பிரபுவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.