சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ‘ஆன்லைன்’ முன்பதிவு நாளை தொடக்கம்!

Spread the love

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலம் நெருங்கியுள்ள நிலையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு (Virtual Queue) நாளை, நவம்பர் 1ம் தேதி தொடங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து மாலையணிந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 17 அன்று தொடங்கி டிசம்பர் 27 வரை நடைபெறும். கோவில் நடை நவம்பர் 16 மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

பக்தர்கள் தினமும் நெய் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்யலாம். கடந்த சில ஆண்டுகளாகப் போல, இந்த ஆண்டும் ஆன்லைன் முன்பதிவு முறை தொடர்கிறது. தினமும்

  • 70,000 பேர் ஆன்லைன் (மெய்நிகர் வரிசை) மூலமாகவும்,

  • 20,000 பேர் ஸ்பாட் புக்கிங் (உடனடி முன்பதிவு) மூலமாகவும்,
    மொத்தம் 90,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டில் முதல் முறையாக, ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ₹5 கட்டணம் வசூலிக்கப்படும். இது கட்டாயமில்லை; விருப்பமுள்ள பக்தர்கள் மட்டும் செலுத்தலாம். இந்த தொகை பக்தர் காப்பீட்டு திட்டத்திற்காக பயன்படுத்தப்படும். சாமி தரிசனம் செய்ய வரும்போது மரணமடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு ₹3 லட்சம் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.

பக்தர்கள் தாங்கள் வர விரும்பும் நாளைத் தேர்வு செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி முன்பதிவு செய்யலாம். அனுமதி சீட்டு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.