திருவனந்தபுரம்: 2025–26 மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்திற்காக, சபரிமலை, பம்பா மற்றும் நிலக்கல் தேவஸ்தானங்களில் பணியாற்ற 1800 தற்காலிக ஊழியர்களை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு (TDB) நியமிக்க உள்ளது.
இந்த பணியிடங்கள் தினசரி ஊதியம் ரூ.650 என நிர்ணயிக்கப்பட்டு, தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஆண்கள் ஆக வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.travancoredevaswomboard.org மூலம் மாதிரி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மருத்துவ சான்றிதழ் மற்றும் சுகாதார அட்டையை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
தலைமைப் பொறியாளர்,
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு,
நந்தன்கோடு,
திருவனந்தபுரம்.
மின்னஞ்சல்: tdbsabdw@gmail.com
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16, 2025 மாலை 5 மணிக்குள் சென்றடைந்திருக்க வேண்டும்.
இந்த வேலை வாய்ப்பு அய்யப்ப பக்தர்கள் மற்றும் தற்காலிக வேலை தேடுவோருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு TDB இணையதளத்தைப் பார்வையிடலாம்.



Leave a Reply