சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம்: சென்னை மாநகராட்சி

Spread the love

சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கான அபராதம் ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சாதாரண குடியிருப்பு கட்டடங்களுக்கான அபராதம் – ரூ.10,000
சாதாரண வணிக கட்டடங்களுக்கு ரூ.25,000
சிறப்பு குடியிருப்பு கட்டடங்களுக்கு ரூ.50,000
சிறப்பு வணிக கட்டடங்களுக்கு ரூ.1 லட்சம்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களுக்கு ரூ.2 லட்சம்
அடுக்குமாடி வணிக கட்டடங்களுக்கு ரூ.5 லட்சம்

இப்படி கட்டடங்களின் வகைகளை பொறுத்து ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதத்தை உயர்த்தி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  முந்தைய விதிகளின்படி, அட்டவணையில் குறைந்தபட்ச அபராதம் இன்னும் ரூ.5,000 ஆக இருந்தது.