சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர். ஜெயராம் அவர்கள் மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம்…
கோவை மாநகராட்சியின் கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்பு கழிவுகளை மேலாண்மை செய்திட கோவை மாநகராட்சியில், மண்டலம் வாரியாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட உப்பிலிபாளையம் கிராமம் வார்டு எண் 60 இல் சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரியம் (க.ச.எண் 260, 261, 264, 266) கொண்ட இடங்களில், கட்டிடக் கழிவுகளை கொட்டுவதற்கு மாநகராட்சியில் தீர்மானம் (பொருள் எண் : 9 ) நிறைவேற்ற உள்ளதாக தெரிய வருகிறது. மேற்கூறிய இந்த இடத்தில் 960 நபர்களால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் இருந்து கிரையம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு கிரயம் பெறப்பட்டுள்ள தனியார் இடத்தில் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதிப்பது என்பது ஏற்புடையதாக இல்லை. எனவே நாளை (27.06.2025) நடைபெற உள்ள மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் பொருள் எண் : 9 ல் 1 வது இடத்தில் உள்ள பகுதியை,
நீக்கம் செய்யும்படி இங்குள்ள பொதுமக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர். ஜெயராம் அவர்கள் மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம்…



Leave a Reply