, , ,

சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

அம்மன் அர்ச்சுணன்
Spread the love

அதிமுகவைச் சேர்ந்த கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

தற்போது, இந்த சோதனை அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக, தனி வருமானத்தை விட அதிக அளவில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி,  செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம்,  ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன் ஆகியோர் அம்மன் அர்ஜுனன் இல்லத்திற்கு நேரில் வந்து தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்மன் அர்ஜுனன், 2016ல் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 2021ல் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், அவரது அதிகாரப்பூர்வ வருமானத்தைக் காட்டிலும் அதிக அளவில், சுமார் ரூ.2 கோடிக்கு மேல் சொத்துக்கள் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த புகாரின் அடிப்படையில், கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.