சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார்

Spread the love

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் இன்று காலை முடிந்த பிறகு, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வெளியே வந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைமுருகனைக் சந்தித்தார்.

இடையில் எடப்பாடி பழனிசாமி, துரைமுருகனின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்து, “உடல்நிலை எப்படி இருக்கிறது? பரவாயில்லையா?” என்று கேட்டார். இருவரும் சுமார் இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பினை அருகில் நிற்கும் மற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கவனித்தனர். அரசியல் கட்சிகளுக்கிடையேயான இந்த மனிதநேயம் மற்றும் நலம் விசாரணை, சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.