சக்திதேவி அறக்கட்டளை சார்பில் விழா:மாணவ, மாணவியருக்கு உதவித் தொகை

Spread the love

 

ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் ஓர் அங்கமான சக்திதேவி அறக்கட்டளை சார்பில் சக்தி சிறப்புப்பள்ளி, சக்தி மறுவாழ்வு மையப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, வழிகாட்டி திட்ட பரிசளிப்பு விழா மற்றும் ஏழை விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விருட்சம் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கும் விழா ஆகியவை ஈரோடு, பழைய பாளையத்தில் உள்ள சக்தி துரைசாமி திருமண மாளிகையில் நடைபெற்றது.
இவ்விழாவில், ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு, விருட்சம் திட்டத்தின் கீழ் உதவித் தொகை மற்றும் வழிகாட்டி திட்டத்தின் கீழ் பரிசுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். திருப்பூர் சாய்கிருபா சிறப்புப் பள்ளி நிறுவனர் கவின் திருமுருகன் கலந்து கொண்டு சக்தி சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மையப் போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கி வாழ்த்துரையாற்றினார். மேலும் இவ்விழாவில், கடந்தாண்டு நடைபெற்ற 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ,100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 41 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பாராட்டி அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.முன்னதாக, இவ்விழாவை சாந்திதுரைசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் துரைசாமி வரவேற்புரையாற்றினார். செந்தில்குமார். தீபா செந்தில்குமார்,இளங்கோ, வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் விழாவிற்கு வந்திருந்த அனைத்து சிறப்பு குழந்தைகளுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்புப்பள்ளி மாணவ, மாணவிகளின் கைத்திறன் படைப்புகள் அனைவரின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டது.