மனித உரிமைகள் சமூக நீதிக் கூட்டமைப்பு சார்பாக சக்கிமங்கலம் இந்திரா நகரில் பார்வையற்றோருடன் பொங்கல் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் இந்திரா நகரில் மனித உரிமைகள் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது சக்கிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகலட்சுமி காசிராஜன், மனித உரிமைகள் அமைப்பு தலைவர் டாக்டர் ஜான் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில், சக்கிமங்கலம் பொதிகை சேர்ந்த 65க்கும் மேற்பட்டோர் பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக பொங்கல் வைத்து அதை அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில், சக்கிமங்கலம் ஜமாத் தலைவர் ஜமால் மைதீன் ,
வழக்கறிஞர் மாரி செல்வம், மதுரை மாவட்ட உறுப்பினர் முகமது அலி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply