கோஷ்டி மோதலின் உச்சத்தில் தவெக; திணறும் விஜய்

Spread the love

தவெக தொடங்கி இரண்டாமாண்டு நிறைவு விழாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி தவெக கோஷ்டி மோதலும் இரண்டாமாண்டு நிறைவு நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்களையே நியமனம் செய்யாமல் இருக்கிறார். பெண் நிர்வாகி தலைமையிலான கோஷ்டியும், தொழிலதிபர் தலைமையிலான கோஷ்டியும் போராடிக்கொண்டிருக்கிறது.

இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய விஜயும் ஒதுங்கியே இருக்கிறார். தனதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று கரூர் சம்பவத்தில் இருந்து ஓடியது போலவே பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் இதை கண்டுகொள்ளவில்லை.

தூத்துக்குடி போலவே பல தொகுதிகளுக்கும் இன்னமும் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் நடைபெறாமல் உள்ளது.வேலுச்சாமிபுரம் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் அது முடிவெடுக்காமல் தன்னைத்தானே தனிமைச்சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிறார் விஜய். நிர்வாகிகள் கூட அவரை தொடர்புகொள்ள முடியாத சூழலே உள்ளது என்கிறார்கள். கரூர் விசயத்தில்தான் இத்தனை அலட்சியமாக இருக்கிறார் விஜய் என்று பார்த்தால் கட்சியில் நிர்வாகிகள் நியமனத்திலேயே படு அலட்சியமாக உள்ளார்.

மாவட்டச் செயலாளர்களையே இன்னமும் நியமிக்காமல் 2026 தேர்தலில் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று விஜய் சொல்வதை கட்சியினரே ரசிக்கவில்லை என்கிறார்கள்.

கோஷ்டி மோதல் இல்லாத இடங்களில் எல்லாம் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்துவிட்டார் விஜய். கோஷ்டி மோதல் இருக்கும் இடங்களில் எல்லாம் இன்னமும் அந்த கோஷ்டி மோதலை தீர்த்து வைத்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்காமல் உள்ளார். இது, தன் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி மோதலையே தீர்த்து வைக்க முடியாமல் திணறும் விஜய், நாளைக்கு முதலமைச்சர் ஆகி ஒரு மாநிலத்தின் பிரச்சனைகளை எப்படி கையாள்வார்? என்றும் கேள்வி எழுந்துள்ளது.