, , ,

கோவை வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான அல்-உம்மா இயக்கத்தின் தலைவர் பாஷா உயிரிழப்பு

1998 bomb blast
Spread the love

கோவையில் 1998-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ. பாஷா உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அல்-உம்மா இயக்கத்தின் தலைவர் பாஷா உட்பட பலர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்படிருந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக பிணையில் வெளிவந்த பாஷா கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்தார்.