கோவை விமான நிலையத்தில் நாளை Yatri Sewa Diwas விழா

Spread the love

கோவை விமான நிலையத்தில் நாளை Yatri Sewa Diwas தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பயணிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி, மரம் நடுதல், கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கு விமான நிலைய விழிப்புணர்வு, ரத்த தானம், கண் பரிசோதனை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பு இயக்குநர் ஜி. சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தினமும் 27 விமானங்கள் பறக்கின்றன. இதன் மூலம் சுமார் 3,000 பயணிகள் பயன்பெறுகின்றனர். நாளைய தினத்தில் பயணிகளை சிறப்பாக வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அவர் கூறியதாவது: தற்போது 2,900 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை, விரிவாக்கத்தின் பின் 3,800 மீட்டராக நீட்டிக்கப்படும். விமான நிலைய கட்டிடம் அகற்றப்பட்டு, புதிய முகப்பு பகுதிக்கு மாற்றப்படும். 18,000 சதுர அடி பரப்பளவில் உள்ள கட்டிடம், நான்கு மடங்கு அதிகரித்து 75,000 சதுர அடியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும், 605 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த விரிவாக்கத்திற்கான சர்வே மற்றும் அளவீட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், செப்டம்பர் 26க்குள் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.