நவம்பர் 18 ஆம் தேதி, திங்கள்கிழமை காலை 8.00 மணியளவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை எஸ். என். ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெறும் “மக்களுடன் முதல்வர் திட்டம் ” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
இதனையொட்டி, சனிக்கிழமை காலை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கோவை எஸ். என். ஆர். கல்லூரி அரங்க வளாகத்தில், கோவை மாநகர் மாவட்டத்திற்குஉட்பட்ட பகுதிச் செயலாளர்கள் மா. நாகராஜ், துரை. செந்தமிழ் செல்வன், இரா. சேரலாதன், அஞ்சுகம் பழனியப்பன், அணிகளின் அமைப்பாளர்கள், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால், பொறியாளர் அணி அமைப்பாளர் நா.பாபு, விவசாய அணி அமைப்பாளர் அக்ரிபாலு, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பூர்ணசந்திரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், தொழிலாளர் அணி அமைப்பாளர் கே. ஆர். ராஜா, இலக்கிய அணி அமைப்பாளர் ராஜ்குமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கோவை அபு, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சஞ்சய் குமார், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டெம்போ சிவா, நெசவாளர் அணி அமைப்பாளர் மணி, தொண்டரணி அமைப்பாளர் அர்ஜுனன், அயலக அணி அமைப்பாளர் கண்ணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சி. ஆர். கனிமொழி, வட்டக்கழகச் செயலாளர்கள் ப. மோகன்ராஜ், கே.ஆனந்த், இலக்கிய அணி துணை அமைப்பாளர் முரசொலி வேங்கடகிரி, இளைஞரணி துணை அமைப்பாளர் க.மணிகண்டன், மற்றும் எஸ்.டி.எஸ்.சரவணன் ஆகியோருடன்.கோவை வருகை தரும் தமிழக முதல்வருக்கு பல்லாயிரக்கணக்கானோரைத் திரட்டி, சிறப்பான முறையில் உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து கலந்துரையாடினார்.
Leave a Reply