சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக மாவட்ட கழக அலுவலகமான “இதயதெய்வம் மாளிகையில்” நேற்று கோவை மாவட்ட கழக மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கேக் வெட்டியும், அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மகளிரணி மாநில இணை செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. அம்மன் கே. அர்ச்சுணன் மற்றும் கழக அம்மா பேரவை இணைச்செயலாளர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.ஆர். ஜெயராம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குணசுந்தரி, கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.



Leave a Reply