,

கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் உயிர் பயத்துடன் பாத சாரிகள்

லட்சுமி மில்ஸ்
Spread the love

கோவை மாநகரில் லட்சுமி மில்ஸ் பகுதி மிக முக்கியமானது. நான்கு முனை சந்திப்பால் போக்குவரத்து நெருக்கடியால் சாலையை கடப்போர் உயிர் பயத்துடன் செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர்.

லட்சுமி மில்ஸ்1910-ம் ஆண்டு ஜி.குப்புசாமி நாயுடு கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் லட்சுமி மில்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தார். இந்தியாவின் பழமை வாய்ந்த துணி உற்பத்தி நூற்பாலையாக இது விளங்கி வருகிறது.

இதன் உற்பத்தி செய்முறை உலகளாவிய தரத் திற்கு இணையானவை.ஜவுளித்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன் முயற்சிகளை தொடர்
ந்து எடுத்து ஏராளமான விருதுகள், நற்சான்றி தழ்கள் என அங்கீகாரம் பெற்றவை. கிட்டத்தட்ட 125 ஆண்டு காலமாக நின்று நிலை பெற்று வரும் லட்சுமி மில்ஸ் நிறுவனத்தின் பெயரே, இந்த சிக்னல் பகுதியாக விளங்கி வருகிறது.

சந்திப்பு அவிநாசி இரு பகுதி பிரதான சாலை, ராமநாதபுரம் புலியகுளம் சந்திப்பு, காந்திபுரம் என நான்கு முனை சந்திப்பாக உள்ள லட்சுமி மில்ஸ் பகுதிக்கு சுந்தராபுரம் பொள்ளாச்சி சாலை பகுதி, செட்டிபாளையம் சாலை பகுதி,போத்தனூர், நஞ்சுண்டாபுரம் ,ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து அவிநாசி சாலைக்கு வருபவர்களும், காந்திபுரம் பகுதிக்கு செல்பவர்களும் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
பீளமேடு வழியாக வெளியூர் செல்பவர்களும், கோவை நகருக்கு வருபவர்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
கனரக வாகனங்கள் முதல் இரு சக்கர வாகனங் கள் வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினம் தோறும் லட்சுமி மில்ஸ் சந்திப்பினை கடந்து செல்கிறது.

உயர்மட்ட மேம்பாலம் அவிநாசி சாலை உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட மேம்பாலம் ரூ.ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. பீளமேடு பகுதி யில் வேகமாக நடைபெற்ற மேம் பாலப் பணிகள், லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதிகளில் மந்த கதியாகவே நடைபெற்று வருகிறது.

யூ டன் சிஸ்டம் கோவை மாநகரின் போக்குவரத்தினை எளிதாகவும், சீராகவும் மாநகர காவல் துறை சார்பில் “யூ டன் “சிஸ்டம் செயல்படுவதைப் போலவே, லட்சுமி மில்ஸ் பகுதியிலும் நடைமுறை உள்ளது. 10 ஆயிரம் பேர் இந்நிலையில், ராமநாதபுரம், ஒலம்பஸ், புலியகுளம், தாமு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5-ம் எண் பேருந்தில் பயணித்து, லட்சுமி மில்ஸ் சிக்னலில் இறங்கி, அவிநாசி சாலை பேருந்துகளை பயன்படுத்துவோர் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கு அதிகமானோர் இருப்பர்.

அலுவலகம் செல்வோர், கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி,கல்லூரி என பல தரப்பினரும் லட்சுமி மில்ஸ் சந்திப்பு சாலையினை கடப்பதற்குள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை உள்ளது.

வானங்கள் மித வேகமாக வந்தாலும், சாலையை கடப்பது சவாலாகவே இருக்கிறது என பாத சாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேர்தல் காலங்களில் வாக்குகளை மட்டும் பெற வரும், அரசியல் கட்சியினர், அன்றாடம் நடைபெறும் இது போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதே இல்லை எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் லட்சுமி மில்ஸ் பகுதியில் மக்கள் எளிதாக கடந்த செல்வதற்கு புதிய திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.

மேலும் இப்பகுதி யில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக தொடங்கப்பட்ட பெரிய வணிக வளாக வாடிக்கையாளர்களாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

கோவை மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கி வரும் இந்த லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் பாதசாரிகள் எளிதாக கடப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்பதே மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.