கோவை ராமநாதபுரம் நாகப்பன் தேவர் வீதியில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்

Spread the love

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை ராமநாதபுரம் நாகப்பன் தேவர் வீதியில் உள்ள விநாயகர் சிலைக்கு இன்று சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் பெருமளவில் வழிபட்டனர். அழகிய அலங்காரத்துடன் ஒளிவிளக்குகள், பூக்கள் மற்றும் பல்வேறு அலங்கார பொருட்களால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டார்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்த இந்த நிகழ்வில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.