சென்னையை சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் நேற்று காலை கோவை வந்தார்.
அவர்கள் ஈஷா யோகா மையம் சென்று விட்டு சென்னை செல்வதற்காக இரவில் கோவை ரயில் நிலையம் வந்தனர்.
அப்போது ரயில் நிலையம் முன்புள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அந்த வாலிபர்களில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த வாலிபரை கண்டித்தார்.
இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆட்டோ டிரைவர்களுக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கி கொண்டதில் 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த வாலிபர்கள் ரயிலில் சென்னை புறப்பட்டு சென்றனர்.
ரயில் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்கள், வாலிபர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply