கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தல் பணிகள், தற்போது நடைபெற்று வரும் நில அளவையீட்டு பணிகள் முடிந்த பின்னர், 2025 மே மாத இறுதியில் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசு விரைவில் கட்டுமான பணிகளை தொடங்க விரும்பும்நிலையில், நில அளவையீட்டு பணிகள் நகரின் பலபகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) மூலம் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
முதல் கட்டத்தில்இரண்டு வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றில், வழித்தடம்-1, 20.4 கிலோமீட்டர் தூரத்தில், அவிநாசி சாலையைத் தொடர்ந்து, உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து நீலம்பூர் வரை செல்லும். இதில், கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட 18 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. வழித்தடம்-2, சத்திய சாலையில் கோயம்புத்தூர் ரயில்வே ஜங்ஷனிலிருந்து வளியம்பாளையம் பிரிவு வரை 14.4 கி.மீ. தூரத்தில் 14 நிலையங்களுடன் உருவாக உள்ளது. இவ்வழித்தடங்களில் தற்போது நில அளவையீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திட்டத்திற்குத் தேவைப்படும் பெரும்பாலான நிலங்கள் அரசு துறைகளின் உரிமையில் இருப்பதால், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் சீராக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மெட்ரோ திட்டம் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய பகுதிகளில் நிலச் சந்தை ஆக்கிரமித்து வளர்ச்சி யடைந்துள்ளதுடன், சில பகுதிகளில் சொத்து விலைகள் 60% வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. குறிப்பாக, உக்கடம் பகுதியில் 50%, அவிநாசி சாலை 40%, வினாயகபுரம் 60% மற்றும் பீளமேடு பகுதியில் 55% வரை சொத்து விலைகள் உயர்ந்துள்ளன.
மெட்ரோ ரயில் திட்டம் கோயம்புத்தூரின் போக்குவரத்து வசதிகளில் முக்கிய மாற்றத்தை உருவாக்கும் என நம்பப்படுகிறது.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தல் மே மாத இறுதியில் தொடங்கும்

Leave a Reply