கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடிக்கு சிறந்த ஆட்சியருக்கான விருது வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவையாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகச் சேவைபுரிந்த மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவா்கள், வேலை வாய்ப்பளித்த தனியாா் நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சேவைபுரிந்த சமூகப் பணியாளா்கள், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024-ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட ஆட்சியா்கள் பிரிவில் கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வி.பி.ஜெயசீலன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இந்த விருதினை மாவட்ட ஆட்சியா்கள் மாநாட்டில் கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளதாக அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடிக்கு சிறந்த ஆட்சியர் விருது……

Leave a Reply