2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை பணிகள் துவங்கியுள்ளன. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போட்டோ காலரியில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும் கோவையில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் மீதும் வெள்ளை பெயிண்ட்கள் அடிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் அரசு வாகனங்களில் தேர்தல் அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டி ஜிபிஎஸ் கருவிகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Leave a Reply