கோவை மாநகர காங்கிரஸ் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கல்

Spread the love

கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 42 மற்றும் 43 ஆம் வார்டுகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள், சேலைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நல்விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் எம். கார்த்திக் தலைமையேற்றார். கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பீளமேடு விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள், சேலைகள் மற்றும் ரூ.500 ரொக்கப் பரிசுகள் வழங்கினார்.

பின்னர் அனைவரும் மகிழ்ச்சியாக பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யூ.சி மாவட்ட தலைவர் பாசமலர் சண்முகம், அரிமா ஆறுமுகம், குறிச்சி லோகநாதன், நாகராஜன், இளங்கோ, தங்கவேலு, பிரசாந்த், சிவா மூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.