, , , , , , , , , ,

கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

Spread the love

வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில்
கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்,

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*

கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி,
மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ,கல்பனா செந்தில்,
கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து,கழக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி,தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை,மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.பி.கண்ணப்பன், ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் ச.குப்புசாமி, தங்கம் சந்திரசேகர், சரஸ்வதி புஷ்பராஜ்,*
*பகுதிக் கழகச் செயலாளர்கள் ப.பசுபதி, மார்க்கெட் எம்.மனோகரன் MC.,வி.ஐ.பதுருதீன்,எஸ்.எம்.சாமி,மு.சிவா MC., ஷேக் அப்துல்லா,மா.நாகராஜ்,இரா . சேரலாதன்,அஞ்சுகம் பழனியப்பன்,வ.ம.சண்முகசுந்தரம்,எ.எம்.கிருஷ்ணராஜூ,கே.எம்.ரவி,*
*வட்டக் கழகச் செயலாளர்கள்*
*அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,*
*அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.*

*இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.*

 

*தீர்மானம் 1*

கழக கொள்கை மறவர் அண்ணன் இரா.மோகன் ex.M.P., அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்.
10-12-2024, செவ்வாய்க்கிழமை அதிகாலை,
கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அண்ணன் இரா.மோகன் அவர்கள் காலமானார்.
1980 ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989 ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி, பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்து, பொதுமக்களின் அன்பு, நன்மதிப்பைப் பெற்றவர்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேரன்பைப் பெற்றவர்.

மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
கழகத் தலைவர் தளபதி அவர்கள் கோவைக்கு வரும்போதெல்லாம், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அண்ணன் இரா.மோகன் அவர்களை, அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்தார்.
கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகப் பணியாற்றியவர்.
மிசா கைதியாக ஓராண்டு காலம் சிறைவாசம் இருந்தவர்.கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று,கழகத்திற்காகவும்,நாட்டுமக்களுக்காகவும் கொள்கை உறுதி மிக்கவராகச் செயல்பட்டார்.
கழகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வந்த அண்ணன் இரா.மோகன் அவர்கள் இழப்பு,
கழகத்திற்கும், கோவை மாவட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும்.

கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில்,
அண்ணன் இரா.மோகன் அவர்களது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களை, இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2.

14-12-2024, சனிக்கிழமை,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தந்தை பெரியார் அவர்களின் பேரனும்,
சொல்லின் செல்வர் திரு.ஈ.வி.கே.சம்பத் அவர்களின் புதல்வருமான மரியாதைக்குரிய திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம் .
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினருக்கும்
கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில்,
திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களை, இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3

திராவிடச் சூரியன், திராவிட மாடல் அரசின் முதலமைச்சர்,தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு, மகளிர் உரிமைத் தொகை,நான் முதல்வன் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட பொன்னான திட்டங்களை செயல்படுத்தி,பொற்கால ஆட்சி நடத்தி வரும்
தமிழ்நாடு மாண்புமிகு .முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் வருகிற‌ 19-12-2024 அன்று காலை 10.00 மணியளவில் கோவை விமான நிலையம் வருகை தருகிறார்.

அவருக்கு தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மாண்புமிகு வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் மகத்தான பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர்,,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,
பகுதிக்கழக,வட்டக்கழகச் செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதி,,வட்டக் கழக நிர்வாகிகள், அனைத்து கழக செயல்வீரர்கள், அனைத்து கழகத் தொண்டர்கள்,BLA-2 நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பதென்று

இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 4

இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல், திராவிட சூரியன்,ஒற்றை செங்கல் புரட்சியின் வெற்றி நாயகன், மக்கள் நலனை என்றும் இதயத்தில் சுமந்திருப்பவர்,நமது கழகம் தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை தழைத்தோங்கி வளரும், உயரும், தமிழ்மக்களின் நலனுக்காக என்றும் உழைக்கும் எனும் நம்பிக்கை ஒளிக்கீற்றை கையில் ஏந்தி வரும் அயராத உழைப்பின் அடையாளம், மக்கள் நலனை என்றும் இதயத்தில் சுமந்திருக்கும், தி.மு.க கழகத்தின் தொண்டன், கழக இளைஞரணிச் செயலாளர், முரசொலி அறக்கட்டளைத் தலைவர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,
தி ரைசிங் சன் ஆங்கில இதழின் வெளியீட்டாளர் என ஓங்கி உயர்ந்து கழகத்தின் காவல் அரணாக காட்சியளிக்கும் கழக இளைஞரணி செயலாளர்,

தமிழ்நாடு மாண்புமிகு துணை முதலமைச்சர் இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,
வருகிற 18-12-2024, புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில்,சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகை தருகிறார்.

பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் மாநகர் மாவட்ட திமுக சார்பில், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, தெற்கு சட்டமன்றத் தொகுதி கழகத்தினர் சார்பில்,

தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு வி. செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் மாபெரும் மகத்தான பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர்,,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,
பகுதிக்கழக,வட்டக்கழகச் செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதி,,வட்டக் கழக நிர்வாகிகள், அனைத்து கழக செயல்வீரர்கள், அனைத்து கழகத் தொண்டர்கள்,BLA-2 நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பதென்று

*இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.*