, ,

கோவை மாநகரின் வளர்ச்சிக்காக வானதி திறம்பட செயல்படுகிறார் – முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

pon radha krishnan
Spread the love

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதிலிருந்து, தனது தொகுதியை முன்னணி சட்டமன்ற தொகுதியாக மாற்றும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக பாராட்டினார். மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியினை மட்டுமின்றி, பல்வேறு சமூக பொறுப்பு நிதிகளைப் பயன்படுத்தி, தொகுதியின் வளர்ச்சிக்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கோவை மாநகரத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அமைச்சர்களை அழைத்து, அவர்களின் மூலம் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் வானதி சீனிவாசன் சிறப்பாக செயல்படுகிறார் என அவர் பாராட்டினார். மொழி அரசியலை மையமாகக் கொண்டு நடைபெறும் நிகழ்வுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ் அனைவரின் உயிராகும். தமிழை அழிக்க எவ்வளவு பெரிய சக்தி வந்தாலும் அது சாத்தியமல்ல. ஆனால், தமிழை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது,” எனக் கூறினார்.

அமித்ஷாவின் வருகையை எதிர்த்து சில அமைப்புகள் கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாகக் கேட்டதற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன், “அவர்களின் பாதி கருப்பு தான். அவர்கள் வெள்ளையை பார்த்ததே இல்லை. அவர்கள் மனமும் செயல்களும் அனைத்தும் கருப்பாகவே இருந்து வருகிறது,” என்று விமர்சித்தார்.