கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பணி நிலையை நிரந்தரமாக்க வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் முன்னெடுத்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் AICCTU, தமிழ் புலிகள், SWWA மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து கலந்து கொண்டன. போராட்டக்காரர்கள், 2021 தேர்தல் வாக்குறுதியின்படி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப் பணிக்குள் கொண்டு வர வேண்டும் என கோரினர். ஒப்பந்த முறையை ரத்து செய்து, மாநகராட்சியே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறிது பரபரப்பான நிலை ஏற்பட்டது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. போராட்டத்தின் காரணமாக, மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சில தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடந்தன. பாதுகாப்பு ஏற்பாடாக, மாநகராட்சி அலுவலகம் முன்பு பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Leave a Reply